யாழில் பிள்ளையைத் துன்புறுத்திய தாய் கைது! குழந்தை மீட்பு! (வீடியோ)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மணியந்தோட்டத்தில் உள்ள அவர் வசிக்கும் வீட்டுக்கு இன்று காலை சென்ற நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் குழந்தையை மீட்டதுடன் தாயாரைக் கைது செய்தனர்.

விசாரணைகளை பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கணவர் அரபு நாடு ஒன்றில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில் அவர் பிள்ளையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அதனாலேயே இதனை வெளிக்கொண்டு வருவதற்காக பெண்ணின் சகோதரனே காணொலிப் பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

திருகோணமலையைச் சேர்ந்த பெண், வாடகைக்கு வீடு எடுத்து மணியந்தோட்டத்தில் வசித்து வந்துள்ளார்.

Previous Post Next Post