இராணுவ வாகனம் - மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் விபத்து! (படங்கள்)

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இராணுவத்தினர் 15 பேர் வரையில் காயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

டிப்பர் வாகனம் வீதியில் சரிந்து வீழ்ந்து காணப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இராணுவத்தினர் வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் பொலிஸாரும் மேற்கொண்டுவருகின்றனர்.

Previous Post Next Post