யாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!


யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர்.

கோப்பாய், இராச வீதியைச் சேர்ந்த குலதீஸ்வரன் லிபிசன் (வயது-26) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த 9 ஆம் திகதி மதியம் தண்ணீர் குடித்தபோது வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார். இந் நிலையில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 12 ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.
Previous Post Next Post