கிளிநொச்சியில் வாள்வெட்டு வன்முறை! பெண் உட்பட 11 பேர் காயம்!!


கிளிநொச்சி மாவட்டம் உருத்திரபுரம் சூழாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியால் சென்ற உழவுயந்திரம் மாட்டுடன் மோதியதில் ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டு வன்முறையில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான குழு முரண்பாடு இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் 11 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் அனைவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை காயம் அடைந்தோரில் வயது முதிர்ந்த பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post