யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 13 ஆண்டுகளின் பின் தமிழ் அரசியல் கைதி விடுதலை! (வீடியோ)


யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் 16 தமிழ் அரசியல் கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த 15 தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 • மன்னார் மாவட்டம்
 1. சிமன் சந்தியாகு
 2. ராகவன் சுரேஸ்
 3. சிறில் ராசமணி
 4. எம்.எம்.அப்துல் சலீம்
 5. சாந்தன் சாளின் ரமேஷ்
 6. கப்ரில் எட்வின் ஜூலியன் 
 • யாழ்ப்பாணம் மாவட்டம்
 1. நடராஜா சரவணபவன்
 2. புருஷோத்தமன் அரவிந்தன்
 3. இராசபாலன் தபோரூபன்
 4. இராசதுரை ஜெகன்
 5. நல்லான் சிவலிங்கம்
 6. சூரியமூர்த்தி ஜூவகன்
 7. சிவப்பிரகாசம் சிவசீலன்
 8. மயில்வாகனம் மதன்
 9. சூரியகாந்தி ஜெயச்சந்திரன் 
 • மாத்தளை மாவட்டம்
 1. விஸ்வநாதன் ரமேஷ்
Previous Post Next Post