ஜேர்மனியில் கத்திக் குத்துத் தாக்குதல்! மூவர் உயிரிழப்பு!! பத்துப் பேர் காயம்!!! (வீடியோ)


  • குமாரதாஸன், பாரிஸ்.
கத்தியுடன் காணப்பட்ட நபர் ஒருவர்பொதுமக்கள் மீது மூர்க்கத்தனமாக
நடத்திய தாக்குதலில் குறைந்தது மூவர் உயிரிழந்தனர். பத்துப்பேர் வரை காயமடைந்துள்ளனர்.

ஜேர்மனியின் பவேறியா மாகாணத்தில் (Bavarian State) Würzburg நகரில் பொது இடம் ஒன்றில் இன்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

தாக்குதலாளி கத்தியுடன் தோன்றும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. பொலீஸார் விரைந்து வந்து காலில் சுட்டுக் கைது செய்யும் வரை அந்த நபர் எதிர்ப்பட்ட அனைவரையும் வெறித் தனமாக வெட்டிக் கொத்தித் தாக்கியுள்ளார்.

சம்பவம் நடந்த பகுதியை பொலீஸார் சுற்றிவளைத்து மூடினர். மக்கள் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள்
மற்றும் உயிரிழந்தவர்களது படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்றும் பொலீஸ் தலைமையகம் அதன் ருவீற்றர் பதிவில் கேட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் 24 வயதான சோமாலியா நாட்டவர் என்று பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அவரது நோக்கம் என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. சம்பவம் குறித்து பவேறியா மாநில பிரதம அமைச்சர் அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டுள் ளார்.

ஜேர்மனியில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் புறம்பாக வெளி நாட்டவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களால் நடத்துகின்ற கொலை வெறித் தாக்குதல்களும் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.
Previous Post Next Post