இரண்டு வாரங்களுக்கு ஊரடங்குச் சட்டம்? நிலைமை மோசமாவதால் புதிய திட்டம்!


நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையினால் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் நடக்காத நிலையில் பூரணமான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராயப்படுவதாக கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் அச்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி நேற்றய தினம் கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. அந்த கூட்டத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை தெடர்ந்தும் அதிகரித்து வருவது தொடர்பாகவும், தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளமை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான நிலமை நீடித்தால் நாடு பாரிய ஆபத்தை சந்திக்க நோிடும். என பலர் கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்ததுடன், கடுமையான உத்தரவுகளுடன் ஊரடங்கு சட்டத்தை ஆக குறைந்தது 2 வாரங்களாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றனர்.

ஊரடங்கு சட்டத்தை மிக இறுக்கமாக பின்பற்றிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் குறைவடைந்துள்ளமையினை கருத்தில் கொண்டு இங்கும் அதே நடைமுறையை பின்பற்றவும் இதற்கான அனுமதியை ஜனாதிபதியிடம் இன்று கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகின்றது.
Previous Post Next Post