பயணத் தடையிலும் யாழில் நடந்த வாள்வெட்டு! ஒருவர் படுகாயம்!!


யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பெலி மத்தி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இரண்டு நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற கருத்து மோதல் வாள்வெட்டில் முடிந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் செல்வராசா பரமேஸ்வரன் (வயது 50) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவருடைய உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மணல் ஏற்றி இறக்கும் விவகாரமே குறித்த வன்முறைக்கு பிரதான காரணம் என்று தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post