லண்டனில் பாரிய தீ விபத்து! (வீடியோ)


தென்கிழக்கு லண்டனில் எலிபன்ட் என்ட் காசல் ரயில் நிலையில் பாரிய தீவித்து ஏற்பட்டுள்ளது, தீயை கட்டுப்படுத்துவதற்கு 70 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையத்தில் பகுதிகள், மூன்று வர்த்தக நிலையங்கள், நான்கு கார்கள் மற்றும் ஒரு தொலைபேசி பெட்டி ஆகியவை தீயில் கருகியதாக லண்டன் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்னர்.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கமைய, ஒரு மிகப்பெரிய கறுப்பு புகையால் அந்த பகுதி மூடப்பட்டுள்ளதனை காணமுடிந்துள்ளது.

அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிக்கொள்ளுமாறு லண்டன் தீயணைப்பு படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் பத்து தீயணைப்பு இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஆபத்தான இடங்களில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் உள்ள அதிகாரிகள் இது ஒரு மிகப்பெரிய சம்பவம் என குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக பல மணி நேரங்களுக்கு வீதிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளனர்.


Previous Post Next Post