பருத்தித்துறையில் எழுமாறு பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா!


பருத்தித்துறை நகர் மற்றும் குறுக்குத் தெரு பகுதிகளைச் சேர்ந்தோரிடம் எழுமாறாக முன்னெடுப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்பட 18 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர், முதலாம், இரண்டாம், மூன்றாம் குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை எழுமாறாக 156 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர். ஏனைய 17 பேரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இதவேளை, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post