யாழில் இளம் பெண்ணைக் காணவில்லை!


யாழ்.தெல்லிப்பளைப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை ஐயனார் கோவில், கட்டுவன் மேற்குப் பகுதியைச் சேர்ந்த செல்வராசா கீர்த்தனா (வயது-27) என்ற இளம் பெண்ணே நேற்று முதல் காணவில்லை.

மனநலம் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் நேற்று மாலை 4.30 மணியளவில் துர்க்கையம்மன் ஆலயத்திற்குச் சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை.

எனவே இவரைக் கண்டவர்கள், தகவல் அறிந்தவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது. 
  • 076 587 4880
  • 076 289 6596
  • 076 315 6488
Previous Post Next Post