யாழில் கொரோனாத் தொற்று! தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர் உயிரிழப்பு!!


தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று நண்பகல் உயிரிழந்தார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் (வயது -44) என்ற தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார்.

கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர், சுயநினைவற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் இன்று நண்பகல் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 124 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post