பிரான்ஸ் மாவட்டம் ஒன்றில் ஆறு நாட்களாக உதிக்காத சூரியன்!

Brest மாவட்டத்தில் தொடர்ச்சியாக 6 நாட்களில் ஒரு நிமிடம் கூட சூரியன் உதிக்கவில்லை.

வானிலை ஆய்வு மையமான Météo France இதனை அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 3 ஆம் திகதியில் இருந்து 8 ஆம் திகதிவரையான 6 நாட்களில் ஒரு தடவை கூட சூரிய ஒளி Brest மாவட்டத்தில் விழவில்லை.

அதேபோன்று ஜூன் மாதத்தில் Finistère மாவட்டத்தில் வெறுமனே 4 மணிநேரங்களும் 7 நிமிடங்களும் மாத்திரமே சூரிய ஒளி படர்ந்துள்ளது.

இறுதியாக 1992 ஆம் ஆண்டு அதிகபட்சமக 4 நாட்கள் சூரிய ஒளி இல்லாமல் Brest மாவட்டம் இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post