மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தடை நீக்கம்!


நாளைமறுதினம் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவை கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் தொடருந்து சேவைகள் நடத்தப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் மற்றும் தொடருந்துளின் சேவைகளைப் பெற விரும்பும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்கள் தங்கள் கடமை அடையாள அட்டை அல்லது கடமை உறுதிப்படுத்தல் கடிதத்தை வைத்திருப்பது கட்டாயமாகும்.

அதே நேரத்தில், அத்தியாவசிய தனிப்பட்ட விடயங்களுக்காக பல்வேறு நிறுவனங்களுக்குச் செல்ல விரும்புவோர் இந்த மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் தொடருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலமும் தங்கள் தேவைகளை நிறைவு செய்ய முடியும். அவர்களும் தங்கள் தேவையை உறுதிப்படுத்தும் ஆவணத்தை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும்.

இன்று கண்டியில் நடைபெற்ற தடுப்பூசி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திலம் அமுனுகம இதனை தெரிவித்தார்.
Previous Post Next Post