கனடாவில் விபத்து! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவன் உயிரிழப்பு!!


கனடா - ஸ்கார்பரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வயதான ஆதித்தன் பிரசன்னா என்ற தமிழ் சிறுவன் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மார்க்கம் சாலை மற்றும் மெக்னிகோல் அவென்யூவுக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்த போது, குழந்தை படுகாயமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ உதவியாளர்கள் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முயன்றனர், எனினும் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

வகனத்தை 39 வயதான பெண் ஒருவரே ஓட்டி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் டொராண்டோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் பெற்றோர்கள் யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post