செல்வச்சந்நிதி முருகனை தரிசிக்கச் சென்றவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அனுமதியளிக்கப்படாத எவரும் ஆலயத்துக்குச் செல்ல முடியாது.

அதனால் இன்று ஆலயத்துக்குச் சென்ற பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றம் இன்று இரவு 7.30 மணிக்கு இடம்பெறுகிறது. உள்வீதியில் திருவிழாவை நடத்தவும் ஒரே நேரத்தில் 100 அடியவர்களுக்கு அனுமதி என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பிரதேச செயலர், சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டுதலில் ஆலயத்துக்கு மிக வேண்டியவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்கள் மாத்திரமே ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அனுமதியளிக்கப்படாத பல நூற்றுக் கணக்கானோர் இன்று வீதிகளிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.


Previous Post Next Post