யாழில் மதுபோதையில் தனக்குத் தானே தீமூட்டி 10 பிள்ளைகளின் தந்தை சாவு!


தவறான முடிவெடுத்த 10 பிள்ளைகளின் தந்தை எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சோமசேகரம் ரவிச்சந்திரன் (வயது-48) என்ற 10 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

“குடும்பத்தலைவரின் சகோதரன் வீடு அருகில் உள்ளது. அவர் நேற்று மதுபானசாலை திறந்தமையால் மதுபோதையில் மாலை வீட்டிற்கு சென்று தனது சகோதரனை தாக்கியுள்ளார்.

சகோதரனைத் தாக்கிய கவலையில் தனது வீட்டு அடுப்படிக்குச் சென்ற அவர் தனக்கு தானே பெற்றோல் ஊற்றியுள்ளார். அதன்போது அவரது மனைவி அடுப்படியில் சமைத்துக் கொண்டிந்துள்ளார். அடுப்பில் பெற்றோல் தெறித்து மனைவி மீது தீ பற்றி கணவன் மீதும் பற்றியுள்ளது.

இருவரும் தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குடும்பத்தலைர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மனைவி சிகிச்சை பெற்று வருவதுடன் அடிகாயத்துக்குள்ளான சகோதரனும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்று முன்னெடுத்தார்.
Previous Post Next Post