பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (16.09.2021)


பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்ரெம்பர் 16, 2021 வியாழக்கிழமை.
  • 74 பேர் மரணம்
  • 8,128 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 1,957 ( - 7) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 65 பேர் உயிரிழந்துள்ளதுடன், முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 74 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை….
  • மொத்த இறப்புக்கள்   115,877
  • மொத்த தொற்றுக்கள்   6,934,732
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை  89,098 (24 மணி நேரத்தில் + 65) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,779 (+9)ஆகும்.
Previous Post Next Post