மதுபான சாலைகளைத் திறக்க அனுமதி – பெருந்திரளானோர் வரிசையில் (படங்கள்)


நாட்டில் ஊரடங்கு உத்தரவு வரும் ஒக்டோபர் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபான சாலைகளைத் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.

மதுவரித் திணைக்களம் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய சகல மதுபான சாலைகளும் இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டன. அதனால் மதுபான சாலைகளில் பலர் திரண்டுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி மூடப்பட்ட மதுபானசாலை இன்று செப்ரெம்பர் 17ஆம் திகதி மாலை மீளத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post