யாழில் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்து இளைஞனைக் கைது செய்த பொலிஸ்!


யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் பெற்றோர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளதை அடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவ் இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கோண்டாவில் செபஸ்தியார் கோவில் பகுதியில் பெற்றோர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த போது பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்த முயன்றதாகவும் பொலிஸார் அவரை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை கைது கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் தாய் மீதும்இ தந்தை மீதும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய நிலையில் அயலவர்களால் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற போது பொலிஸார் மீதும் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டு விட்டு தப்பியோட முயன்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு அவரை கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post