யாழில் மருத்துவ பீட மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! (படங்கள்)


யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியொருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முதலாமாண்டு மாணவி  திருலிங்கம் சாருகா (22) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். 

கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை.

சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.

குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும்தெரிவிக்கப்படுகின்றது.Previous Post Next Post