ஜேர்மனியில் கொரோனாக் கட்டுப்பாட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! பொலிஸார் மீது தாக்குதல்!! (படங்கள்)

ஜேர்மன் நகரமொன்றில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் திரண்ட பேரணி ஒன்றில் வன்முறை வெடித்தது.

ஜேர்மன் நகரமான Greizஇல் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து சனிக்கிழமையன்று மக்கள் பேரணிகள் நடத்தினர்.

சமூக ஊடகங்கள் வாயிலாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அந்த பேரணியில், 1,000 எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்த முயல, மக்கள் அவர்களை மீறி முன்னேற, பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பட்டாசுகளை கொளுத்தி பொலிசாரை நோக்கி வீசியதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது. இதில் 14 பொலிசார் வரை காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்ட 207 பேரை அடையாளம் கண்டுள்ளார்கள். சிலர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post