பிரான்சில் ஆளும் கட்சி எம்.பி வீடு மீது தாக்குதல்!

பிரான்சில் ஆளும் கட்சி எம்.பி வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வடக்கில் இருக்கும் சாம்பிலியில் உள்ள Pascal Bois எம்.பி வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Pascal Bois, பிரான்ஸ் ஜனாதிபதி ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஆளும் LREM கட்சியைச் சேர்ந்த எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை இரவு Pascal Bois எம்.பி-யின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் கேரேஜ்க்கு தீவைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அவரது வீட்டை சுற்றியுள்ள சுவற்றில் ‘ஓட்டு போட வேண்டும்’போன்ற வாசகங்கள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.

பிரான்சில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி மீதான சட்டத்தை கடுமையாக்க அரசாங்கம் தயாராகி வருதால், அதற்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டக்காரர்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஜனநாயகத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கூறிய உள்துறை அமைச்சர் Gerald Darmanin, சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வாரத்தில் பாரிஸின் வடக்கில் Noyon-ல் உள்ள LREM கட்சி எம்.பி Carole Bureau-Bonnard அலுவலகத்தின் சுவற்றில் இதே போன்ற வாசகங்கள் வண்ணம் தீட்டப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post