யாழில் டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்து! (படங்கள்)

யாழ்.வளைவுக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது.

நல்லூர் - செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் ஏற முற்பட்ட போது , யாழில் இருந்து வந்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post