நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வடக்கின் சில பகுதிகளும் அடங்குகின்றன.

இன்று வியாழக்கிழமை இரவு 9 மணிக்குள் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்று இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை காரணமாக 135 மெகாவாட் மின்சாரம் இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post