பிரான்ஸில் குரங்கு அம்மை நோய்த் தொற்று! சுகாதார அதிகார சபையின் அறிவித்தல்!!

  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்
பிரான்ஸின் சுகாதார அதிகார சபை (La Haute autorité de Santé) குரங்கு அம்மை நோயாளர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்குப் பெரியம்மைத் தடுப்பூசி ஏற்றுமாறு பரிந்துரைத்துள்ளது.

பிரான்ஸிலும் ஐரோப்பிய நாடுகளிலும் குரங்கு அம்மைத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்தே அதற்கு எதிரான தடுப்பூசித் திட்டம் மீள ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார அதிகார சபை தெரிவித்திருக்கிறது.

மருத்துவப் பணியாளர்கள் உட்பட தொற்றாளர் ஒருவருடன் ஆபத்தான விதத்தில் தொடர்பு கொண்டிருந்த வளர்ந்தவர்கள் அனைவருக்கும் ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்ட பெரியம்மைத் தடுப்பூசி மருந்தின் மூன்றாவது தலைமுறைத் தடுப்பூசியை (3rd generation) மூன்று தடவைகள் செலுத்துமாறு அதிகார சபை பரிந்துரைத்துள்ளது.

பெரியம்மைத் தடுப்பூசியின் முதலாவது இரண்டாவது தலைமுறை (1st and 2nd generation) தடுப்பூசிகள் 1986 ஆம் ஆண்டின் பின்னர் பொதுப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன.தற்சமயம் அதன் மூன்றாவது புதிய தலைமுறைத் தடுப்பூசியே பெரியம்மை மற்றும் குரங்கு அம்மை நோயாளர்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

தொற்றாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டவர்களுக்கு நான்கு நாட்களுக்குப் பிறகும் 14 ஆம் நாளின் பின்பும் இரண்டு தடவை அல்லது மூன்று தடவைகள் தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மொழியில் "variole du singe" என்று அழைக்கப்படுகின்ற குரங்கு
அம்மை நாட்டில் இதுவரை ஐந்து பேருக்குத் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post