
இன்று வெள்ளிக்கிழமை (27) அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஊடகங்களில் வெளியாக செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
எதிர்வரும் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சு தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களின் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.