அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

நாளை மறுதினம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாளை அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்கவே நாளை வெள்ளிக்கிழமை (15) பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனைத் தவிர வாக்கு எண்ணும் மத்திய நிலையமாகப் பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் இன்று (14) முதல் மூடப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post