யாழில் இளம் யுவதி தூக்கில் தொங்கி உயிரிழப்பு! (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூர், சங்கிலியன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (வயது-20) என்ற இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் திருமண நிகழ்வு ஒன்றுக்காக வெளியில் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த குறித்த யுவதி தூக்கில் தொங்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற குறித்த மாணவி, கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Previous Post Next Post