கொரோனா தனிமைப்படுத்தும் நிலையம் கொடிகாமத்திலும் அமைப்பு!

யாழ்.மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க பாதுகாப்பு அமைச்சு – இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது.

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கோரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் இராணுவ முகாமில் அமைப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருப்போர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோர் இந்த நிலையத்தில் தங்க வைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடும் கோரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post