மதுபானக் கடைகள் திறப்பது தொடர்பில் அரசு விடுத்த அறிவிப்பு!

சில்லறை மதுபான விற்பனைக்காக மதுவரித் திணைக்களத்தின் உரிமங்கள் பெற்ற மதுபான நிலையங்கள் ஊரடங்கு தளர்த்தப்படும் கால எல்லைக்குள் சுகாதார அறிவுறுத்தல்களுக்குக் கட்டுப்பட்டு திறக்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைசின் செயலாளரின் அறிவுறுத்தல்கள் மற்றும் கோவிட் -19 நோயைத் தடுப்பதற்கான பிற பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கு இணங்குவதற்கான நிபந்தனைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளிக்கு உள்பட்டு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறும் மதுவரி உரிமம் பெற்ற இடங்கள் தொடர்பாக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும், மதுபானத் தொழில் தொடர்பாக அதிகபட்ச அளவிலான தொழில் ஒழுக்கத்தைப் பேணவும் அனைத்து மதிவரி அதிகாரிகளுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post