பிரான்ஸ், Bobigny - HLM வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சலுகை!

கொரோனா வைரஸ் நெருக்கடி பொதுமக்களின் சமூக வாழ்வாதரத்திலும் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில் HLM வீட்டில் குடியிருப்பவா்களுக்கான வாடகைகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு பொது அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கான சலுகைகள் போதாமையாக உள்ளது என்ற கருத்தும் பரவலாக காணப்படுகின்ற நிலையில் 93 ஆம் பிராந்தியத்தில் உள்ள Bobigny பகுதி HLM வீடுகளுக்கான ஏப்ரல் மாத வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சமூக நலவாரிய வீடுகளான 4 ஆயிரம் HLM வீடுகளுக்கே இவ்வாறு வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதோடு, பிரான்சின் முதலாவது செயற்பாடாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post