இலங்கையில் கொரோனாத் தொற்று! 10ஆக உயர்ந்தது உயிரிழப்பு!!

இலங்கையில் கோரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கையில் கோரொனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குவைத்திலிருந்து நாடு திரும்பிய 51 வயதுடைய பெண் ஒருவர் திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்தார்.

அவர் இருதய நோயாளர். உயிரிழந்தவரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்திய நிலையில் அவருக்கு கோரோனா உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை நாட்டில் ஆயிரத்து 149 பேருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post