பிரான்ஸில் உணவகங்கள் திறக்கும் திகதி அறிவிப்பு!

இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், அறிக்கை ஒன்றைப் பிரதமர் வெளியிட்டுள்ளார். இதில் முக்கியமாக நெடுங்காலமாகக் கேள்விக்குறியாக இருந்த உணவகங்கள், அருந்தகங்கள் என்பனவற்றை,மீளத் திறக்கும் திகதி பற்றிய செய்திகளும் வழங்கப்பட்டுள்ளன.

பிரான்சின் நோய்தொற்று அடிப்படையில் பிரிக்கப்பட்ட வரைபடத்தில் உள்ள பச்சைப் பகுதிகளில் மட்டும், June 2ம் திகதி முதல் உணவகங்கள், அருந்தகங்கள் (restaurants, bars, cafés) போன்றவற்றைத் திறக்கலாம் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Ile-de-France உட்படப் பல பகுதிகள் தொடர்ந்தும் சிவப்புப் பகுதிகளாகவே பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதால், அவற்றிற்கான திகதிகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

June 2ம் திகதி இந்தப் பகுதிகளிற்குப் பொருத்தமானதல்ல. பச்சைப் பகுதிகளிற்கான June 2ம் திகதியென்ற கால எல்லை என்பதுகூட மே 25ம் திகதியே நிர்ணயிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post