இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள்!

இலங்கையின் வர்த்தக வலயங்களில் பணிபுரியும் பெரும்பான்மையான பெண்கள், தங்கள் பணியிடங்களில் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் 14 சிறப்பு வர்த்தக வலயங்கள் நிறுவப்பட்டதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்ந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வர்த்தக வலயங்களில் உள்ள பெரும்பான்மையான தொழிலாளர்களாக பெண்களே உள்ளடக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து தங்கள் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

அவர்களில் 90 சதவிகிதத்தினர் தங்கள் பணிக் காலத்தில் ஒரு முறையாவது பாலியல் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஆர்வலர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த பெண்களில் பெரும்பாலோர் ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். அவர்களில் அதிகமானோர் வறுமையினால் பாதிக்கப்பட்டதுடன் ஓரங்கட்டப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பதிகளில் இருந்து வந்தவர்களாகும். அவர்கள் இரண்டு தசாப்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.

சர்வதேச தொழிலாளர் தினத்தை அனுசரிக்கும்போது, ஆடைத் தொழிலாளர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வலையமைப்பான Stand Up இயக்கத்தின் இலங்கை இயக்குனர் ஆஷில மாபலகமவின் நேர்காணல் காணொளி ஒன்றை இங்கே காணலாம்.

இந்த வர்த்தக வலயங்களில் பெண் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகுவதனை அவர் தெளிவாக விளக்கியுள்ளார்.
Previous Post Next Post