லண்டனில் வேலையில்லாமல் போகும் ஆபத்தை எதிர்நோக்கவுள்ள தமிழர்கள்!

லண்டனில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பல தமிழர்கள் வேலை இல்லாமல் போகும் ஆபத்தை எதிர்நோக்கவுள்ளதாக எதிர்வுகூறப்பட்டுளள்து.

தற்போது பிரிட்டனில் வேலை செய்ய முடியாமல் வீட்டில் உள்ள நபர்களுக்கு 80 சதவீத சம்பளத்தை அரசாங்கம் கொடுக்கிறது. மீதம் உள்ள 20 சதவீதத்தை அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் தமது சொந்த பணத்தில் வழங்கி வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் தொடக்கம் 75 சதவீதத்தை அரசாங்கம் கொடுக்கும் என்றும், 25 சதவீதத்தை கம்பனிகளே பொறுப்பேற்க்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளதால், ஆகஸ்ட் மாதத்தில் பலரை வேலையால் நிறுத்தி விடுவதே நல்லது என்ற முடிவை பல தனியார் கம்பெனிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏன் என்றால் இவர்களால் அந்த 25  சதவீதத்தை கூட செலுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது. இதனால் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் பல ஆயிரம் பேருக்கு வேலை இலாமல் போகலாம் என்ற நிலை தற்போது தோன்றியுள்ளது.

இதற்கு முன்னுதாரணமாக நிசான் கார் கம்பெனி இன்று பல நூறு வேலை ஆட்களை நிறுத்தியுள்ளது.  மேலும் 1700 பேரை லண்டனில் நிறுத்த தீர்மானம் எடுத்துள்ளதாக அன் நிறுவனம் அறிவித்துள்ளது.எனவே தமிழர்களே ஜக்கிரதை.
Previous Post Next Post