அல்லைப்பிட்டியில் சாராயம் கடத்தியவரைக் கைது செய்யப் பெண்கள் எதிர்ப்பு! (படங்கள்)

அல்லைபிட்டியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அல்லையூர் ராசா என்பவர் 28 சாராயப்பாேத்தல்களுடன்பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அல்லைப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக பொதுக்கள், பொதுஅமைப்புக்களின் எதிர்ப்புக்களை மீறி கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து மண்டைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி  விவேகானந்தன் தலமையிலான பொலிஸ் குழுவினரால் நேற்று கைது செய்ய முற்பட்டனர்.

எனினும்  அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்ட பெருமளவு பெண்கள் அவரை கைது செய்ய விடாமல் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இருந்து பெருமளவு பொலிசார் வரவழைக்கப்பட்டு குறித்த நபர் 28 முழு சாராயப்பாேத்தல்களுடன் கைதுசெய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதிமன்றில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதால் பெருமளவு வழக்குகள் நடைபெற்று வருகின்றது. அதில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றில் 5வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post