பிரான்ஸில் கொரோனாவின் பெயரால் நடக்கும் பகல் கொள்ளை! லாச்சப்பலிலும் இதே நிலைதான்!!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் பல நிறுவனங்கள் அதிகளவு பணத்தினை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழர் வர்த்தக நிலையமாகத் திகழும் லாச்சப்பலிலும் பல வர்த்தக நிலையங்கள் தங்களின் பொருட்களுக்கு அதிக விலையினை நிர்ணயித்து விற்பனை செய்கின்றனர். இது தொடர்பில் நாங்கள் இவ்விடத்தில் தெரிவித்திருந்தோம்.

அதாவது,  கொரோனா வைரசின் பெயரால் அதிகளவான பணத்தினை வாடிக்கையாளர்களிடம் இருந்து பல நிறுவனங்கள் அறவிடுவதாக 60 மில்லியன் நுகர்வோர் அமைப்பு ( 60 millions de consommateurs)அறிவித்துள்ளது.

மே11 பொதுமுடக்க நீக்கத்தின் முதலாம் கட்டத்துக்கு பின்னராக சிகையலங்கார நிலையங்கள்(coiffeurs), வாகனதிருத்திடங்கள்(Garagistes) , பல்வைத்திய நிலையங்கள் (dentistes), உட்பட பல்வேறு நிறுவனங்கள் இந்த அறவிடுதலில் முன்னணி வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வேளைகளில் இது கிருமி நீக்கம் செய்யப்படுவதற்கான இந்த பணம் அறவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு முன்னறவிப்பு ஏதுமின்றி 35 இருந்து 49 யூறோ வரை வாகனதிருத்திடங்கள் பல அறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

les garagistes. Une cliente dénonce notamment à 60 millions de consommateurs des frais de désinfection de son véhicule de 49 euros, qui lui ont été facturés sans préavis par son garagiste. Sur Twitter, une autre personne se demande si les “35 euros supplémentaires pour décontamination” sont bien “réglementaires ou s’il s’agit d’une arnaque”.

சிகையலங்கார நிலையங்கள் 5 இருந்து 7 யூறோ வரை கிருமி நீக்கிக்கான பணம் என்ற பெயரில் அறவிடுவதோடு, பலவைத்திய நிலையங்கள் 20 யூறோ அதிகமாக taxe Covid என்ற பெயரில் அறிவிடப்படுகின்றன.

les coiffeurs ne chôment pas mais le passage à la caisse en cette fin de printemps s’avère souvent plus douloureux pour le client qu’au coeur de l’hiver. Début mai, le patron du Conseil national des entreprises de coiffure (CNEC), Franck Provost, annonçait que le prix des coupes allait certainement être majoré dès la reprise. L’augmentation devait être de l’ordre de “2 à 5 euros”, précisait-il au micro deRMC. C’est parfois plus. Ici, un internaute s’agace des sept euros de taxe appliqués par son salon de coiffure. Soit une hausse de plus de 20%.

Même constat ici puisque la coupe simple avec shampoing a vu son prix passer de 22 à 28 euros. Un surplus de plus de 27%.

En contact étroit avec leurs patients, des dentistes ont eux aussi appliqué la fameuse “taxe Covid”. Obligée de payer vingt euros en plus pour une séance, Françoise s’en est plaint auprès de 60 millions de consommateurs. “Je n’ai pas été prévenue au début du soin et il n’y avait aucun affichage à la réception”, précise cette habitante de la métropole bordelaise. Une pratique discutable car les dentistes “peuvent profiter de différents dispositifs d’aide, notamment de la subvention Prévention Covid prévue par l’Assurance maladie pour l’installation de matériel de protection”, souligne le défenseur des consommateurs.

ஒரு பொருளின், அல்லது சேவையின் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலைக்கு குறைவாக அதனை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாக உள்ளதோடு, அதற்கு மேலாக விற்பனை செய்வதற்கு தடை இல்லை (சில விதிவிலக்குகள் உண்டு). ஆனால் விலை உயர்வு என்பது முறையாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டே செய்யப்பட வேண்டும்.

இதேவேளை தமிழர் வர்த்த நிலையமான La Chapelle பகுதியில் உள்ள பல அங்காடிகளில் மரக்கறிகள் யாவும் 7,90Euroக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post