மாங்குளத்தில் விபத்து! ஹயஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று பாரவூர்தி!! (வீடியோ)

யாழ்ப்பாணம்-கண்டி ஏ 9 பிரதான வீதியில் மாங்குளம் பனிக்கநீராவி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் பயணித்த கொள்கலன் பொருத்திய பாரவூதியும் ஹைஏஸ் வானும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.வான் மீது பராவூர்தி ஏறி நின்றது. இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றது.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் வீதியில் மக்கள் நடமாட்டமற்றுக் கிடந்தது. ஹைஏஸ் வானின் மேலேறிய பாரவூர்தியை மீட்டெடுக்க சுமார் ஒரு மணி நேரம் போராட வேண்டியிருந்தது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஹைஏஸில் பயணித்த இரண்டு பயணிகள் படுகாயமடைந்தனர். அத்துடன், பாரவூர்திச் சாரதி வாகனத்திலிருந்து இறங்க முடியாது திண்டாடினார். இரு வாகனங்களும் அதிவேகமாக பயணித்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்ட மங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருதாகத் தெரிவித்தனர்.


Previous Post Next Post