யாழ்.திருநெல்வேலியில் பல வாகனங்களை மோதித் தள்ளிய டிப்பர்! (படங்கள்)

யாழ் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தியில் டிப்பர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் பாரிய விபத்தைத் தவிர்க்க முற்பட்டவேளை வீதியை விட்டு விலகியதில் வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் மேதியுள்ளது.

இதனால் ஏற்படவிருந்த பாரிய உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பாரிய சேதத்தை எதிர்கொள்ளவிருந்த கார் தெய்வாதீனமாக சிறு சேதாரங்களுடன் தப்பித்துக்கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 


Previous Post Next Post