யாழ்ப்பாணம் நோக்கி வந்த கார் வவுனியாவில் விபத்து! (படங்கள்)

வவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் இருந்து யாழ். சாவகச்சேரி நோக்கி பயணித்த கார் அதிகாலை 1 மணியளவில் வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வைத்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

அந்த காரானது வீதி கரையில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியதாக தெரியவருகிறது. விபத்தில் காரை ஓட்டிய நபரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்திற்கு இலக்கான கார் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post