பிரான்ஸில் பல்பொருள் அங்காடி ஒன்றின் பெயரில் நடக்கும் மோசடி! மக்களுக்கு எச்சரிக்கை!!

பிரபல பல்பொருள் அங்காடி பெருநிறுவனமான E.Leclerc, தனது நிறுவனத்தின் பெயரில் சலுகை வழங்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் உலாவுகின்ற போலியான விளம்பரம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவித்துள்ளது.

அங்காடியில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு 140 யுறோக்கள் பெறுமதியான கொள்வனவு பணச்சலுகையினை பெற்றுக் கொள்ள பதிவு செய்து கொள்ளுங்கள் என்ற பெயரில் உலாவும் போலி விளம்பரம் குறித்தே அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போலி விளம்பரம் கோரியுள்ள உங்கள் வங்கி இலக்கத்தினையோ, தனிநபர் தகவல்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அரசாங்கமும் எச்சரித்துள்ளது.
Previous Post Next Post