மதத் தீவிரவாதிகளின் வெறியாட்டம்! அடித்துடைக்கப்பட்ட இந்து ஆலயம்!! (படங்கள்)

மன்னார்-யாழ் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம் இனம் தெரியாத நபர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சிற்றாலயத்தில் காணப்பட்ட இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள் ஆலயத்தின் வாசல் பகுதியில் உடைக்கப்பட்டுள்ளதுடன் சில படங்கள் அருகில் உள்ள பற்றைகாடுகளுக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.அதே நேரத்தில் சிற்றாலயத்தின் வெளிப்பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலையானது குப்பைகள் மற்றும் மரத்துண்டுகளினால் மூடப்பட்டு நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிற்றாலயமானது தொடர்சியாக இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே இது குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.
Previous Post Next Post