கொரோனாத் தொற்று! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் சவுதியில் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக சவுதியில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி இமையாணன் மேற்கு கிராமத்தை சேர்ந்த அரசன் செல்வராஜா (வயது -51)என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இவர் சவுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 14 நாட்களின் பின் சிகிச்சைபலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இவர் மூன்று வருடங்கள் அங்கு வேலை செய்துவிட்டு சொந்த ஊரான இமையாணன் மேற்கிற்கு விடுமுறையில் வந்து ஐந்து மாதங்களுக்கு முன் தான் சவூதிக்கு திரும்பியிருந்தார்.

சவுதியில் இவர் பணிபுரிந்த நிறுவனம் நிறுவனம் நேற்று (16) இவர் உயிரிழந்துள்ளதாக அவருடைய மனைவிக்கு அறிவித்துள்ளார்கள்.
Previous Post Next Post