தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மகாறம்பைக்குளம், ரம்பவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும் அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னா் அது கைகலப்பாக மாறியுள்ளது.
கள்ளக்காதல் விவகாரமொன்றை இவர் மற்றவர்களுடன் பேசியதாக குறிப்பிட்டு, இரண்டு குடும்பங்கள் அது தொடர்பில் அவருடன் முரண்பட்டுள்ளனர்.
ஒரு பெண் அவரை தாக்கியுள்ளார். இதன்போது, அவருக்கு மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டதாக முன்னர் சொலப்பட்ட போதும், அது இன்னும் உறுதியாகவில்லை.
இதன்போது, அவருக்கு மற்றவர்கள் தீ வைத்தாா்களா? அல்லது தனக்குத்தானே தீ வைத்தாரா என்பது தெரியவில்லையென பொலிசார் குறிப்பிடுகிறார்கள்.
29 வயதுடைய இளம் குடும்ப பெண்ணே தீயில் எரிந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு தீ வைத்தது யார் என்பது தொடர்பில் மாமடு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எரிந்த பெண்ணின் இரண்டு சகோதரர்கள் காணாமல் போயுள்ள நிலையில், நேற்று வவுனியாவில் காணாமல் போனவர்களிற்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.