பிரான்ஸ் அரசின் அதிரடி அறிவிப்புக்கள்! மீறுவோர் மீது கடும் நடவடிக்கை!!

பிரான்சில் கொரோனா வைரசின் 2வது அலை தொடங்கினாலும் முற்றிலுமாக முடக்கப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிந்து கொள்ளலாம்.

•முக கவசம்- மக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும், பொது இடங்கள், பொது போக்குவரத்து சேவைகள் என அனைத்திலும் முககவசம் அத்தியாவசியமான ஒன்று. எனினும் தெருக்கள், கடற்கரைகள், பொதுபோக்கு பூங்காக்களில் கட்டாயம் இல்லை என்ற போதும், அந்தந்த உள்ளூர் அதிகாரிகள் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

•135€ வீதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பயன்படுத்திய முகக்கவசங்களை வீசினால் அவர்களுக்கு €135 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது 86 யூரோ தண்டப்பணம் அறவிடப்பட்டு வருகின்றது. அந்த கட்டணம் தற்போது €135 யூரோவாக அதிகரிக்கப்பட உள்ளது, ஜூன் மாத நடுப்பகுதியில் இருந்து இந்த தண்டப்பணம் அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். அதேவேளை, போக்குவரத்தில் முகக்கவசம் அணியாமல் பயணித்தால் 135யூரோ அபராதம் விதிக்கப்படும் மற்றும் தொடர்ந்து பயணிக்க அனுமதி மறுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

•10க்கும் மேற்பட்டோர் ஒன்று கூட தடை- ஊரடங்கு உத்தரவால் தங்கள் உறவுகளை பிரிந்திருந்த போதும் சந்திப்பதற்காக தடை தொடர்கிறது. பொது இடங்களில் சந்திப்பதாக இருந்தாலும் 10க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடக்கூடாது, இது தனியார் குடியிருப்புகளுக்கும் பொருந்தும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

•முத்தமிட தடை- கிருமிகள் மிக எளிதாக பரவலாம் என்பதால் கைகுலுக்க தடைவிதிக்கப்பட்டது போன்று முத்தமிடவும் தடை விதிக்கப்படுகிறது.

•1 மீட்டருக்கு நெருக்கமாக இருக்கக் கூடாது- சுகாதாரத்துறையின் அறிவுரையின் படி பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், அடிக்கடி கைகளை கழுவவும், Hand Gelகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இருமும் போது முழங்கைகளை பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்படுகிறது.

•வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கவும்- பயணம் செய்வதற்கு தற்போது தடையில்லை என்ற போதும், எல்லையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் யூன் 15ம் திகதி வரை தேவையான வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

•வீட்டிலிருந்து வேலை- மே 11ம் திகதியே அலுவலகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டாலும், அதிகபட்சம் மக்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள், இது மக்கள் அலுவலகங்களில் கூடுவதையும், போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் தடுக்கும்.

•பொழுதுபோக்கு - பிரான்ஸ் தற்போது ஆரஞ்ச் மற்றும் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில். பச்சை மண்டலத்தில் மட்டும் சுற்றுலா தளங்கள், நீச்சல் தடாகங்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆரஞ்சு மண்டலங்களில் யூன் 22ம் திகதி வரை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

•ரக்பி மற்றும் விளையாட்டு- 5000க்கும் மேற்பட்ட மக்கள் கூட தடையிருக்கும் நிலையில் ரக்பி, கால்பந்தாட்ட போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும். மேலும் 2019/20 ம் ஆண்டுக்கான போட்டிகள் முடிவடைந்துவிட்டதாகவும், வருகிற செப்டம்பர் மாதத்தில் புதிதாக தொடரை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

•வகுப்பறைகளில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி- பிரான்சில் ஆரஞ்சு மண்டலங்களை தவிர்த்து பெரும்பாலான நகரங்களில் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வகுப்பறைக்கு 15 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கேற்றவாறு வகுப்பறைகளின் நேர அட்டவணையை மாற்றியமைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

•அத்தாட்சி படிவம் வேலைக்கு செல்வதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் பயணிப்பதாயின் அத்தாட்சிபடிவம் மற்றும் அடையாளஅட்டை அவசியம் இதேபோன்று மக்கள் பெரும்பாலும் கார்களை தவிர்க்குமாறும், கஃபேக்கள். உணவகங்களில் Outdoor Terrace யை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post