யாழில் பரபரப்பு! காட்டுப் பகுதிக்குள் ஆண் நண்பர்களுடன் சென்ற இரு பெண்கள் கடத்தல்!!

யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் இருவர் அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்ட நிலையில் ஒருவர் அந்த முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அந்தப் பெண் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரியவருவதாவது, சுன்னாகத்தினைச் சேர்ந்த இளம் பெண்கள் இருவர், கொடிகாமத்தில் உள்ள தமது ஆண் நண்பர்கள் அழைத்ததற்கு அமைய அவர்களை சந்திக்கச் சென்றிருக்கின்றனர்.

அவ்வாறு சென்றவர்கள் தமது நண்பர்களின் மோட்டார் சைக்கிள்களில் சுட்டிபுரத்திற்கு அண்மித்த மாசேரி என்ற பகுதி ஊடாக வடமராட்ச்சி கிழக்கு பகுதி நோக்கிச் சென்றிருக்கின்றனர். அவ்வாறு காட்டுப்பாதையின் ஊடாக சென்றபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் அவர்களை ஏற்றிச்சென்றவர்களை தாக்கிவிட்டு பெண்கள் இருவரையும் கடத்தியிருக்கின்றனர்.

அவ்வேளை ஒரு பெண் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய பின்னர் வீதியில் பயணித்த ஒருவரின் துணையுடன் கொடிகாமம் பொலிஸ் நிலையம் வந்ததாக சொல்லப்படுகின்றது.

இருப்பினும் அவர்களை ஏற்றிச் சென்ற ஆண் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டமையால் குறித்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையா என்ற கோணத்திலும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதால் கொடிகாமம் பொலிஸார் பருத்தித்துறைப் பொலிஸாருடன் இணைந்து கடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற இளம் பெண்ணைத் தேடி அங்கு சென்றிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post