வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்த பொங்கல் நிகழ்வில் இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி இன்று பூத்தூவியுள்ளது.
போருக்கு பின்னர் ஆண்டு தோறும் விமானப்படையினர் உலங்குவானூர்தியில் ஆலயத்தின் மேலாக பறந்து மலர் தூவுவது வழமையாக இடம்பெற்றுவருகின்றது.
கொரோனா அச்சுறுத்தல் நிலவுவதால் ஆலயத்திற்கு செல்கின்ற பக்தர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்பட்டுவருகின்றது. அவ்வாறு செல்கின்றவர்களும் இராணுவத்தினரால் வாசலில் மறிக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையானவர்களை தொகுதி தொகுதியாக வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
இதேவேளை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் இலங்கை இராணுவத்தளபதியும், கொரோனாத் தடுப்பு ஜனாதிபதி செயலணி தலைவருமான லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா திடீரென வருகை தந்து வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன்,தனது நினைவாக மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.