
கொரோனா வந்தாலும் வந்தது, என்ன நடந்தாலும் மக்களுக்கு உலகம் அழிந்துவிடுமோ என்ற பயம் வந்துவிடுகிறது. பாரீஸில் திடீரென மின்சாரம் தடைபட, 117,000 வாடிக்கையாளர்களுடன் அலுவலகங்கள் அப்படியே ஸ்தம்பித்துப்போக, 210,000 வீடுகளில் எந்த சாதனமும் இயங்காமல் போக, ரயில்கள் ஆங்காங்கு நின்றுவிட, மக்களுக்கு பயம் வந்துவிட்டது.
எல்லோரும் சமூக ஊடகங்களில் என்ன ஆயிற்று என்று தீவிரமாக விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
எனது வீட்டில் பத்து நிமிடங்களாக மின்சாரம் தடைபட்டுள்ளது, இது என்ன? உலகம் அழியப்போகிறதா என்று ட்வீட்டினார் ஒருவர்.
ஏற்கனவே மக்கள் கடுப்பில் இருக்க, பாதி நாள் இப்படித்தான் இருக்கும் என்று என் நண்பர் கூறுகிறார் என கொளுத்திப்பொட்டார் மற்றொருவர். 20 நிமிடங்களுக்கு இந்த மின்தடை நீடித்ததாக மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மின்சாரத்தை விநியோகிப்பதில் ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டதால்தான் இந்த மின்தடை ஏற்பட்டதாக பிரான்ஸ் முன்னணி மின் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாரீஸில் 20 நிமிடங்களுக்கு மின்தடை ஏற்பட்டது. அதனால் மக்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம் என்றும் தெரிவித்தது அந்த நிறுவனம்.
Paris blackout: Huge power outage across French capital sparks chaos - 'Apocalypse?'https://t.co/GNxbw2bM2Q— l E T 17 (@Inevitable_ET) June 24, 2020