
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அண்மையில் உள்ள வீடொன்றின் மீது இனம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. எனினும் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்களே இந்தத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.